சென்னை:
ள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி அன்று துவங்கியது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடம் குறித்து அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன். பாஜக தரப்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியனும் பங்கேற்றுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.