சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதிப்பட்டியலை மாநில தேர்தல்ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாகவும்,  இந்த தேர்தலில்,  18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதிப்பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி,  27 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்கள்  மற்றும் இறுதி வேட்பாளர்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

மொத்த பதவியிடங்கள்:  91,975

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்  3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர்

வேட்புமனு நிகராரிகப்பு: 3,643 பேர்,.

வேட்புமனு திரும்ப பெற்றவர்கள்: 48 ஆயிரத்து 891 பேர் பேர்

போட்டியின்றி தேர்வு பெற்றவர்கள்: 18 ஆயிரத்து 570 பேர்

இறுதியாக களத்தில் நிற்பவர்கள்:   2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 பேர்

இதில், கிராம ஊராட்சி வார்கு உறுப்பினர்களுக்கான 76,746 பதவியிவிடங்களுக்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 847 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 1,994 வேட்புமனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டன. 18 ஆயிரத்து 818 வேட்பு மனுக்கள் திரும்பபெறப்பட்டன. 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதிப்போட்டியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதேபோல், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 9,624 பதவியிடங்களுக்கு 54 ஆயிரத்து 757 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 753 வேட்புமனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டது. மேலும், 17 ஆயிரத்து 983 வேட்புமனுக்கள் திரும்பபெறப்பட்டன. அதன்படி 410 பதவியிடங்களுக்கு வேட்பாளர் கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கிராம ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 35,611 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 5,090 பதவியிடங்களுக்கு 34 ஆயிரத்து 398 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 787 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரத்து 812 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 23 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

5,067 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 22 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இதேபோல், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கான பதவியிடங்களுக்கு 3,992 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் உரிய பரிசீலனைக்கு பின்பு 109 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், 1,278 வேட்புமனுக்கள் திரும்பபெறப்பட்டன. அதன்படி 515 பதவியிடங்களுக்கு 2,605 பேர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து தேர்தல் களம்  பரபரப்பாகி உள்ளது. அனைத்து கட்சியினரும் வாக்குகள் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.