சென்னை,

மிழகத்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

 

திமுக வழக்கு காரணமாக கடந்தஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையின்போது  தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்து உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது ஐகோர்ட்டு, தமிழக தேர்தல்ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையில் தமிழக தேர்தல் ஆணையாளர் பதவி ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய ஆணையாளராக மாலிக் பெரோஸ்கான் இந்த மாதம் பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்தன.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கின்போது,  கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என உறுதி யளித்திருக்கிறது.