சென்னை: உள்ளாட்சி அமைப்புகள்  தமிழக அரசுக்கு ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிர்நாட்டின் மின்கட்டணம் உயர்த்தப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களிடமும் கருத்துகேட்டது. ஆனால் பொதுமக்கள் மின் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருந்தாலும் மின்கட்டணம் உயர்த்தப்படுவதில் மாற்றம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள மின் கட்டண பாக்கித்தொகை ரூ1800 கோடியை வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் மொத்தம் 3.24 கோடி மின்இணைப்புகள் உள்ளன. இதில்,  2.33 கோடி வீடுகள்,36 லட்சம் வணிக நிறுவனங்கள்,  7.55 லட்சம் தொழிற்சாலைகள் மற்றும் , 22 லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு, 9 லட்சம் குடிசைகளும் இடம்பெற்றுள்ளன. இது தவிர 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களும் உள்ளனர். அதாவது, தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல், புனல், காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில், 22 லட்சம் விசாயிகளின் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,  இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சிற்றூராட்சிகள் போன்றவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால்  உள்ளாட்சிகள், முறையாக கட்டணம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.  இதனால், சுமார் 1800 கோடி மின் கட்டண பாக்கி உள்ளது. இதை வசூலிக்க   தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 31.7.2022ம் தேதி நிலவரப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவைத் தொகை சுமார் ரூ1,800 கோடியாக உள்ளது. அதனால்,  நிலுவையில் உள்ள பாக்கி தொகையை பெற சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுக கண்காணிப்பு பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.