விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா? கங்கை அமரன் திமீர் பேச்சு

Must read

டில்லி,

டில்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்கிறது.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதாவில் இணைந்த கங்கை அமரன் தமிழக விவசாயிகள் குறித்து திமிராக பதில் அளித்துள்ளார்.

பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உள்பட 8 பேரை போலீசார்  அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், பிரதமர் அலுவலகத்தில் மோடி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக விரக்தி அடைந்த விவசாயிகள் அனைவரும் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டி யிட்ட கங்கை அமரன் கூறியதாவது,

பிரதமர் மோடி போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா என்றும்,  பணக்கார விவசாயிகள் கடனை வாங்கிக் கொண்டு தள்ளுபடி செய்ய கோருவது நியாயமா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும் என்றும், நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் திமிராக கூறியுளாளர்.

சாதாரண திரைப்படத் துறையினரையெல்லாம் சந்திக்கும் பிரதமர் ஏன் நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளை சந்திக்க முடியாதா என்று கேட்டதற்கு, ஒரு நாட்டின் பிரதமர் எல்லோரை யும் சந்தித்துவிட முடியுமா  என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,  3 ஆயிரம் ஏக்கர் வைத்திருக்கும் பெரிய பெரிய விவசாயிகள் கூட கடன் வாங்கிக் கொண்டு அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நியாயம்? என்றும், தான் ஒரு பாமர அரசியல்வாதி என்றும் சொல்லிக்கொண்டார்.

ஏற்கனவே போராடும் விவசாயிகள் குறித்து தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை போன்ற வர்கள் கடும்சொற்களை கூறி, தமிழக மக்களின் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளையில், கங்கைகை அமரனின்  இந்த திமீர் பேச்சு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article