கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் சிறு, குறு, தொழில் கடன் போன்றவற்றுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்ந்து கடந்த 5ந்தேதி வழக்கின் விசாரணையின்போது, மத்தியஅரசின் பதில் தெளிவில்லை என்று கூறி, வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு சரியானை பதிலை தெரிவிக்க வேண்டும் என்று ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரம்மான பத்திரத்தில், 6 மாதங்களுக்கு மேல், கடன் வட்டிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடியிது என்று தெரிவித்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்தியஅரசு தரப்பில், வட்டிக்கு வட்டி இல்லை என்பதை வங்கிகள் அமல்படுத்த தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏறறுக்கொண்ட நீதிமன்றம், ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களிடம் பொதுமுடக்க காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை உடனே அமல்படுத்த வேண்டும் உத்தரவிட்டது.மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.