சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதுடன், பெண்கள் சுய தொழில் செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். அந்தவகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு செயல்படுத்தும் இரண்டு முக்கிய திட்டங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசின் இரண்டு முக்கிய திட்டங்கள்
சுய வேலைவாய்ப்பு திட்டம் (தனிநபர்) (SEP-I):
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தனிநபர்கள் தொழில் தொடங்கிட மற்றும் சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த வங்கிகளில் இருந்து ஒரு நபருக்கு குறைந்தது ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. வங்கிகளில் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
சுய வேலைவாய்ப்பு திட்டம் (குழு) (SEP-G):
இத்திட்டத்தின் மூலம் ஆர்வமுள்ள ஏழை, எளிய மக்கள் குழுக்களாக தொழில் தொடங்கிட மற்றும் வங்கிகளிலிருந்து ஒரு குழுவிற்கு குறைந்தது ரூ.1.50 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.