நாக்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் குப்பையில் வீசப்பட்ட அழகான பச்சிள்ம் பெண் குழந்தை  மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கல்நெஞ்சக்காரர் குறித்தும் சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சி, இன்றைய சமுதாயத்தில்  பாரம்பரியம், சமூக நல்லிணக்கம், மனிதாபிமானம் போன்றவை மரணித்து வருவதற்கு இதுஒரு சான்றாக அமைந்துள்ளது.

சம்பவத்தன்று அழகான குழந்தை ஒன்று நாக்பூர் அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசப்பட்டி ருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த சிலர், அந்த பச்சிளங்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஜேஎல்என் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. அதுபோல குழந்தை யின் வாழ்க்கையும் சிறப்பானதாக அமையவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குழந்தையை வீசிச்சென்றது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த அழகான பெண் குழந்தையைசாக்ஷி ஜோஷி வினோத் கப்ரி என்ற பத்திரிகையாளர் தம்பதியினர் தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சக்காரர்களின் மனிதாபிமான மற்ற செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டு வருகிறது.