காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தோர் ‘’ஸ்டார்’’ பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்தனர்..

Must read

 
பாட்னா :
பீகார் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் 30 ‘’ஸ்டார்’’ பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த பட்டியலில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
வியப்பூட்டும் விதமாக அண்மையில், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய “புரட்சியாளர்கள்” குலாம்நபி ஆசாத், அகிலேஷ் பிரசாத் சிங், ராஜ்பாப்பர் ஆகியோர் பெயரும் “ஸ்டார்” பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் முதல்-அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பின்னர், காங்கிரசில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சச்சின் பைலட்டுக்கும், இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பெயர் உள்ள போதிலும், கொரோனா பரவல் காரணமாக சோனியாவும், மன்மோகன் சிங்கும் பீகாருக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது. காணொலி காட்சி மூலம் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்.
– பா.பாரதி

More articles

Latest article