மும்பை

ந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப் பயணத்துக்கான  இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

வரும் 17 ஆம் தேதி தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட் பந்தயங்கள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்த தொடரில் டி 20 போட்டிகள் குறித்து பிறகு இரு நாட்டு வாரியங்களும் முடிவு செய்ய உள்ளன.  இதில் ரோகித் சர்மா டி 20 போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.   இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் டெஸ்ட் போட்டிகளுக்குத் துணைத் தலைவராகவும் ஒரு நாள் போட்டிகளுக்குத் தலைவராகவும் ரோகித் சர்மாவை நியமித்து உத்தரவு இடப்பட்டிருந்தது.  மேலும் தென் ஆப்ரிக்க தொடருக்கான டெஸ்ட்ப் போட்டி வீரர்கள் பட்டியல் நேற்று வெளியானது.   இதில் ரவீந்திர ஜடேஜா, சுப்மான் கில், அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யபடவில்லை.

இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விவரம் வருமாறு :

விராட் கோலி(அணித்தலைவர்ரோஹித் சர்மா(துணைக் அணித்தலைவர்), கே.எல்.ராகுல்மயங்க் அகர்வால்சத்தேஸ்வர் புஜாராஅஜின்கயே ரஹானேஸ்ரேயாஸ் அய்யர்ஹனுமா விஹாரிரிஷப்பந்த்விருதிமான் சஹா,ரவிச்சந்திர அஸ்வின்ஜெயந்த் யாதவ்இஷாந்த் சர்மாமுகமது ஷமிஉமேஷ் யாதவ்ஜஸ்பிரித் பும்ராஷர்துல் தாக்கூர்முகமது சிராஜ்

காத்திருப்பு வீரர்கள்நவ்தீப் ஷைனிசவுரவ் குமார்தீபக் சஹர்அர்ஸன் நாக்வஸ்வாலா