டில்லி
உலகெங்கும் தற்போது விவாகரத்து அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது திருமண விகிதங்களைப்போல் விவாகரத்து விகிதங்களும் அதிகரித்து வருகின்றன. இது உலகெங்கும் உள்ள ஒரு முக்கியமான குடும்பப் பிரச்னையாக உள்ளது. இந்த தகவல்கல் அதிகார பூர்வமாக திருமணம் செய்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்பட்ட விவரமாகும். ஆனால் பலர் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதால் அவர்களின் பிரிவு விவாகரத்தாக கணக்கில் வருவதில்லை.
உலக நாடுகளில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இது திருமணமானோர் மற்றும் அதில் விவாகரத்து செய்துக் கொண்டோரின் விகிதம் ஆகும்.
இதில் அதிகமாக லக்செம்பர்க் நாட்டில் 87% விவாகரத்து நடந்துள்ளது.
அதே போல் மிக குறைவாக இந்தியாவில் 1% விவாகரத்து நடந்துள்ளது.
உலகில் அதிக அளவில் விவாகரத்து நடக்கும் 10 நாடுகளும் விகிதங்களும்
லக்செம்பர்க் – 87%
ஸ்பெயின் – 65%
பிரான்ஸ் – 55%
ரஷ்யா – 51%
அமெரிக்கா – 46%
ஜெர்மனி – 44%
இங்கிலாந்து – 42%
நியுஜிலாந்து – 42%
ஆஸ்திரேலியா -38%
கனடா – 38%
உலகில் குறைந்த அளவில் விவாகரத்து நடக்கும் 10 நாடுகளும் விகிதங்களும்
இந்தியா – 1%
சிலி – 3%
கொலம்பியா – 9%
மெக்சிகோ – 15%
கென்யா – 15%
தென் ஆப்ரிகா – 17%
எகிப்து – 17%
பிரேசில் – 21%
துருக்கி – 22%
ஈரான் – 22%
லக்செம்பர்க் :
அதிக விகிதத்தில் விவாகரத்து நடத்தும் லக்சம்பெர்க் நாடு ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமர் 5,00,000 ஆகும். இந்த நாட்டில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வரும் அதே வேளையில் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா :
குறைந்த விகிதத்தில் விவாகரத்து நடைபெறும் இந்தியாவில் பெரும்பாலும் காதல் திருமணங்களே விவாகரத்தில் முடிவடைகின்றன என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். உலகெங்கும் இல்லாத அளவு அதிகமாக இங்கு பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து மதத்தின் முக்கிய கொள்கை என்பதால் இங்கு விவாகரத்து அதிகம் நடப்பதில்லை என கூறப்படுகிறது. அத்துடன் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் இந்தியப் பெண்கள் விவாகரத்தை அதிகம் விரும்புவதில்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் தற்போது கூட்டுக் குடும்ப முறை குறைந்து வந்தாலும் பெண்களுக்கு உள்ள அந்த குடும்பப் பாசம் இன்னும் குறையாமல் உள்ளதால் விவாகரத்து அதிகம் நிகழ்வதில்லை என தெரிகிறது.
[youtube-feed feed=1]