புதுச்சேரி:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 4வது முறையாக ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் மற்றும் மக்களின் வாழ்வாரம், நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்துள்ளதால், புதுச்சேரியைசேர்ந்தவர்கள் மது வாங்க தமிழக எல்லைக்குள் செல்வதை தடுக்கும் வகையில், நாளை முதல் புதுச்சேரியிலும மதுக்கடைகளை திறப்பது என அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை முதல் மதுக்கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]