புதுச்சேரி

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி வரும் 25ஆம் தேதி அன்று புதுச்சேரியில் பல இடங்களில் மதுக்கடை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் நகரில் வரும் 25ஆம் தேதி அன்று பல்வேறு நிகழ்வுகள் நடை பெற உள்ளன.  இதில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி அன்று புதுச்சேரி வருகிறார்.   பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணிகள் பலப் படுத்தப் பட்டுள்ளன.   மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மோடியின் வருகையை ஒட்டி லாஸ்பேட்டை விமான நிலையப் பகுதி அரவிந்தர் ஆசிரமப் பகுதிஉள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அன்றைய தினம் மாலை 6 மணிவரை திறக்க காவல்துறை ஆணையர் ஜான்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   இந்த உத்தரவு வார இறுதி நாளை கொண்டாடும் ‘குடிமன்கள்’  மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.