கேரளாவிலும் மது விலை ‘கிடு கிடு’ உயர்வு..
மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மதுக்கடைகளை இன்னும் திறக்காத மாநிலங்களில் பக்கத்துக் கேரளாவும் ஒன்று.
மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி முடிவடைந்த பின் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவுக்கு வந்துள்ளது, கேரள அரசு.
‘’யானை வரும் பின்னே..மணி ஓசை வரும் முன்னே’’ என்று சொல்வது போல், மதுக்கடைகள் திறக்கப்படும் செய்தியை , நேற்று அறிவிக்கப்பட்ட மது விலை அதிகரிப்பு செய்தி ஊர்ஜிதம் செய்துள்ளது.
ஆமாம். மாவிலையைக் கேரளா கடுமையாக உயர்த்தியுள்ளது.
பீர் மற்றும் ஒயின் விலை 10% உயரும்.
பிற சரக்குகள் விலை 35% அதிகரிக்கும்.
’ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இழந்த வருவாயை ஈட்டும் வகையில் மது விலை உயர்த்தப்படுகிறது’’ என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சரக்குகளின் விலை உயர்வை மட்டும்( முழு பாட்டில்) காணலாம்.
பகார்டி ரம் 150 ரூபாயும், சிக்னேச்சர் விஸ்கி 140 ரூபாயும் ,விலை உயர்ந்துள்ளது.
மேஜிக் மொமண்ட்ஸ் வோட்கா விலை 100 ரூபாயும், மேன்சன் பிராந்தி விலை 90 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்