’’ தொறப்பாங்க.. ஆனா தொறக்க மாட்டாங்க..’’ மதுக்கடை வாசல் கலாட்டா…
முட்டாள் தினத்தன்று வலைத்தளங்களில் வைரலான ஒரு தகவல், குடிமகன்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளது.
நடந்தது என்ன?
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று ( ஏப்ரல் ஒன்றாம் தேதி)
பெங்களூரு பகுதியில் ,சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியானது.
கொரொனா வைரஸ் போல் இந்த செய்தி வைரலானது.
’இன்று ( புதன் கிழமை) மதுக்கடைகளைத் திறக்கப்போகிறார்கள்’’ என்ற செய்தியே அது.
பெங்களூருவில் உள்ள பல மதுக்கடைகளில் காலையில் இருந்தே நீண்ட கியூ.
அங்குள்ள கடாக் பகுதியில் உள்ள கடையில், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களும் திரண்டனர்.
நேரம் செல்ல செல்ல, கூட்டம் அலை மோதியது.
’’சமூக விலகல்’’ என்ற அரசின் விதியை தூக்கி எறிந்தனர்.
‘’ஏம்பா கடையை தொறப்பாங்களா?’’ என்கிறார் கியூவில் நிற்கும் ஒருவர்.
பின்னால் நிற்பவர்’’ தொறப்பாங்க.. ஆனா தொறக்க மாட்டாங்க’’ என ஈன ஸ்வரத்தில் பதில் சொல்கிறார்.
விஷயம் பொலீஸ் காதுகளை எட்டுகிறது.
விரைந்து வந்தது- போலீஸ்.
‘’ எவனோ உங்களை ஏப்ரல் பூல்’ பண்ணி இருக்கான்’’ என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைந்து போகச்செய்துள்ளது, போலீஸ்.
‘முட்டாளாக்க நாங்கதான் கிடைச்சோமா?’’ என்று முனகியபடியே சென்றனர், குடிமகன்கள்.
– ஏழுமலை வெங்கடேசன்