பிரபல இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் முதல் அஞ்சான் வரை பல்வேறு படங் களை இயக்கி உள்ளார். இவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். தயாரிப்பாளர். விரைவில் நடக்க உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இரு அணி களில் ஒன்றில் இணைந்து செயல்பட்டார். தற்போது அதிலிருந்து விலகியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களுக்கு.
திருப்பதி பிரதர்ஸ் ஈ. சுபாஷ் சந்திர போஸின் பணிவான வணக்கம். நான் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தேன். ஆனால் தற்போது அந்த அணியிலிருந்து விலகியுள்ளேன். அதற்கான தன்னிலை விளக்கமே இந்த கடிதம்.
நமது தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு வலு வான தலைமையில் அமைய வேண்டு மென கடந்த பத்து நாட்களாக இரு பெரும் தலைவர்களை “ஒன்றிணைக்க கடுமையான முயற்சிகள் எடுத்து வந்தோம். அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போய்விடவே நானே சுயமாக எடுத்த முடிவுதான் இது,
அதற்கு ஒரே காரணம் 3351 தயாரிப்பாளர் களின் நலன் மட்டுமே அவர்களுடைய நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத் துள்ளேன். ஏற்கனவே நமது சங்கத்தை பிளவுப்படுத்த பலர் நினைக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு வலுவான தலை மையை உருவாக்க வேண்டுமென்பதே என் போன்ற பல ‘தயாரிப்பாளர்களின் எண்ணம். தொடர்ந்து தயாரிப்பாளர்களின் உரிமைக்காக போராடும் அனைத்து முயற்சி களுக்கும் என் குரல் முதல் குரலாக ஒலிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக விரைவில் நாம் ஒரு மிகச் சிறந்த வலுவான தலைவரை உருவாக்கி நம்.
சங்கத்தை மீட்டெடுப்போம். மகிழ்ச்சி.
இவ்வாறு திருப்பதி பிரதர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்திருக்கிறார்.