சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 22-ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், மழை காலம் ஓய்ந்தும், கடுமையான குளிர் நிலவி வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ள நிலையில், நேற்று இரவு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்றும் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதனால், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிப்.21, பிப்.22 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். டுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்த பட்சவெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.