டில்லி

பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில்,

”எனது அன்பு மக்களே, வணக்கம்,

கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள்,   இதற்கு நன்றி அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்கமுடியும். வீட்டில் உள்ள அனைவருமே இறைவனின் வடிவமாகும்.

இன்று தேசிய ஊரடங்கின் 9 ஆம் நாளாகும்.  மக்களின் இந்த ஒத்துழைப்பு பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. நம்மில் யாரும் தனித்து இல்லை  அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். நாம் அனைவரும் ஒன்றாக ஒளியை உருவாக்கி கொரோனா என்னும் இருட்டை விரட்டி அடிக்க வேண்டும்.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் போன்றவற்றை ஏற்றி 9 நிமிடங்கள் கையில் ஏந்த வேண்டும்.  இதன் மூலம் நமது ஒற்றுமை வெளியே தெரியும்.

இந்த செயலை நாம் நமது வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டும்.  இதை நாம் பால்கனியில் இருந்து நடத்தலாம்.  யாரும் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு வர வேண்டாம்.  சமூக இடைவெளியை அனைவரும் குடைபிடிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்”

எனத் தெரிவித்துள்ளார்.