சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்ல முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த டிராம் வண்டி சேவைகளைப் போல ‘லைட் மெட்ரோ’ சேவைகளை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு  ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதனால் ஏற்பட்டுள்ள கூட்ட நெரில் மற்றும் வாகன நெரிசலை போக்க மெட்ரோ ரயில், மாடி ரயில் என பல்வேறு போக்குவரத்து சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் மெட்ரோ ரயிலின் 2வது கட்ட மற்றும் 3வது கட்ட சேவைகளுக்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் அண்ணா நகர், தி.நகர் உள்பட பொழுதுபோக்கு பகுதிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு  லைட் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவது தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்கிறது. அதனப்டி,  பொதுப் போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி என 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த லைட் மெட்ரோ திட்டம் என்பது சாலைகளிலேயே ரயில்களை இயக்கும் நடவடிக்கை யாகும். அதாவது முன்காலத்தில் சென்னை உள்பட பல நாடுகளில் செயல் பாட்டில் இருந்த டிராம் வண்டி ரயில் சேவை.  இந்த திட்டம் ஏற்கனவே   1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு, நிலக்கரி மற்றும் மின்சாரம் மற்றும் எரிபொருளைக்கொண்டு இயக்கப்படும் வகையில் செயல்பாட்டில் இருந்தது.

அதைப்போன்ற ஒரு திட்டம்தான் லைட் மெட்ரோ ரயில் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு  திட்டமிடப்பட்டிருக்கிறது. சுரங்கப்பாதை, உயார்மட்ட பாதை இன்றி சாலையிலேயே செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலையோரம் அல்லது மையப் பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு ரயில் 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்கபப்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்தி வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. லைட் மெட்ரோ தொடர்பாக 2.50 லட்சம் பேரிடம் நேரடியாக கருத்து கேட்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசனது சென்னை மாநகரின் ஒரு போக்குவரத்து திட்டத்தை தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றது. சென்னைக்கான போக்குவரத்து திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அதாவது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கான திட்டத்தை தயார் செய்ய ஒரு தனியார் அமைப்புக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த டெண்டர் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை குழுமம் கருத்துக்களை வழங்கி வருகின்றது. இந்த லைட் மெட்ரோ வானது சென்னையில் மிகவும் குறுகிய பகுதிகளில் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளிலும், சென்னையில் முக்கிய தெருக்கள் இணைக்கும் வகையில் இந்த லைட் மெட்ரோ அமைக்கப்படுகின்றது. அதாவது தற்போது சென்னையில் அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்பட்டு வருகின்றது.

இந்த அண்ணா சாலைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளை அண்ணா சாலை இணைக்கும் வகையில் இந்த லைட் மெட்ரோ திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தை பொறுத்தவரையில் மெட்ரோ ரயில்களின் செலவு அதிகமாகும் என்பதால் இந்த லைட் மெட்ரோ திட்டமானது மிகவும் குறைவான செலவில் அமைக்கப்படவுள்ளது.

மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் சாலையின் நடுவில் அல்லது சாலையின் ஓரத்திலே மின்சாரம் மூலம் இயங்கும் ரயில் பெட்டிகளை கொண்டு இந்த லைட் மெட்ரோ திட்டமானது அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ திட்டம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சம்மந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் துவங்கியுள்ளது.

சென்னையில் ஆங்காங்கே கேமரா வைத்து போக்குவரத்து சர்வே சென்னையில் மக்களின் பயன்பாடு பொது போக்குவரத்து சென்னையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பான 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொண்டு வருகின்றது. விரைவில் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.