பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2
நேற்று முதல் பகுதியில் சில போதனைகளை பார்த்தோம்
மேலும் சில பகவத் கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்
இன்று இரண்டாம் பகுதி
- மக்களில் பலர் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
- “அவரவர்வாழ்வு,அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
- இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு.
- ஆனால்,நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
- “எல்லாமேநான்இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
- எனவே,கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
- மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
- மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
- அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
- பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
- நண்பர்களிடம் அளவளாவு.
- நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
- இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
- வாழ்வை கண்டு களி!
- ரசனையோடு வாழ்!
- வாழ்க்கை வாழ்வதற்கே!நாளை மூன்றாம் பகுதியில் மேலும் சில போதனைகளை காண்போம்