கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது .
கள்ளச்சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்
மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்
விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்பவர்களுக்கு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி தண்டனை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.