செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த ரவண்ஸ்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஜஸ் அலி, “AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்து போன ஒரு நபர் வாழ்வது போல் செய்ய முடியும்.
AI-யைக் கொண்டு ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனை ஆகியவற்றை துல்லியமாக பதிவிட்டு இரட்டையர் போன்று தோற்றமளிக்கும் செயற்கையான இன்னொரு நபரை உருவாக்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் 2050 ல் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறந்து போன நபரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற தரவுகளைப் பதிவிடுவதன் மூலம் இறந்த பின்னும் அவர்கள் வாழ்வது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதை அடுத்து இந்த AI தொழில்நுட்பம் முழுமை பெற மேலும் சில ஆண்டுகள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.