புதுடெல்லி:
எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இன்று முதல் 9 ஆம் தேதி வரை பொது வெளியிட்டுக்கு வரும் எல்.ஐ.சி.யின். ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 கோடியே 13 லட்சம் பங்குகளை வெளியிட்டு 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஐபிஓவின் பிரைஸ் பேண்ட் ஒரு ஈக்விட்டி பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை இருக்கும் என்று மத்திய அரசு ஏப்ரல் 27 அன்று தெரிவித்தது. பொதுச் சலுகை மூலம் ரூ.21,000 கோடி திரட்ட மத்திய அரசு நம்புகிறது.

5% பங்குகளை விற்பதன் மூலம் ரூ.70,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், பின்னர் 3.5% பங்குகளை விற்று ரூ.21,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் சுர்ஜேவாலா கூறினார்.

இந்த நடவடிக்கை குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றார்.

பிப்ரவரியில் ரூ.12-14 லட்சம் கோடியாக இருந்த அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மதிப்பீடு ஏப்ரல் மாதத்தில் ரூ.6 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டினார்.