டில்லி

யுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல் ஐ சியில் தற்போது நிதி நிலை சீராக உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

எல் ஐ சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஆயுள் காப்பிட்டுக் கழகம் குறித்து கடந்த சில வாரங்களாகப் பல செய்திகள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன.   தற்போது எல் ஐ சி கடும் நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் தவிப்பதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.   அத்துடன் எல் ஐ சி தனது ஏராளமான சொத்துக்களைக் கடன் காரணமாக இழந்துள்ளதால் கடும் நிதி நிலை நெருக்கடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இது பாலிசிதாரர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   பலரும் தாங்கள் செலுத்தி உள்ள தொகை திரும்பக் கிடைக்குமா என்னும் ஐயத்தில் ஆழ்ந்தனர்.   இதனால் எல் ஐ சி புதிய பிரிமியம் வசூலில் 0.41% குறைவு ஏற்பட்டது.   இதையொட்டி எல் ஐ சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “எல் ஐ சி நிதி நிலை பலவீனமாக உள்ளதாக தவறான செய்திகள் உலவி வருகின்றன.  இதனால் பாலிசிதாரர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் வர வேண்டிய தொகை கிடைக்காது என்பது முழுக்க முழுக்க வதந்தி ஆகும்.  எல் ஐ சியின் நற்பெயரைக் கெடுக்கக்  கிளப்பி விடப்பட்டுள்ள இந்த போலி செய்திகளால் பலர் பீதி அடைந்துள்ளனர்.

இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.   எல் ஐ சி நிர்வாகம் பாலிசிதாரர்களுக்கு தற்போது நிதி நிலை மிகவும் நன்றாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறது.  பங்குச் சந்தையில் எல் ஐ சி பங்குகள் விலை அதிகரித்து வருகிறது.  அது மட்டுமின்றி எல் ஐ சியின் வருட வருமானமும் இந்த வருடம் அதிகரித்து வருகிறது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.