சென்னை:
னைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வருவாய்த் துறை நிர்வகிக்கிறது. அவற்றில் முக்கியமானவை பட்டா மாற்றம், நிலப் பிரிப்பு, பல்வேறு வகை சான்றிதழ்களை வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை ஆகும். ஆனால் இந்த சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் ஒரு தாலுகா அலுவலகத்தில் முதல்வர் சோதனை நடத்தி பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்தார். எனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகா அலுவலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட சில சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.