மும்பை:
டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் அவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளதாவது: சட்ட நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இதைப் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும் அது அவருடைய உரிமை அவர் செய்வதை செய்யட்டும், அதற்க்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
டிஆர்பி ஊழல் வழக்கில் தங்களை பற்றி பேசியதால், மும்பை போலீஸ் கமிஷனர் மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன் என்று ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்திருந்தார், இதற்கு தான் செய்தியாளர் சந்திப்பில் நக்கலாக பதிலளித்துள்ளார் மும்பை போலீஸ் கமிஷனர்.
இதற்கு பதிலளித்த அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீஸ் அதிகாரிகள் விலை சென்றுவிட்டனர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.