சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள, சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்டு 2 ஆம் தேதி குடியிரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் பன்வாரிலாலுக்கு பேரவை தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
சென்னை மாகணமாக இருந்தபோது, அப்போது முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டபேரவை 1921ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தொடங்கப்பட்டது. அதனை சிறப்பிக்கும் வகையில் சட்டபேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, ஆகஸ்டு மாதம் 2 தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் குடியரசு தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க, ஆளுநர் தலைமை சட்டமன்ற பேரவையின் 100ம்ஆண்டு விழா தொடக்கமும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ படம் பேரவையில் திறக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டப்பேரவை வளாகத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆளுநர் மாளிகைக்கு சென்று விழாவுக்கு வருமாறு பன்வாரிலால் புரோகித்திற்கு அழைப்பு விடுத்தார். விழாவுக்கான சிறப்பிதழை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதிடம் வழங்கினார். அவருடன் சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி. , திமுகவின் கொறடா கோ.வி செழியன் உடன் சென்றனர்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்க சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி ஆகியோர் நாளை டெல்லி செல்லவுள்ளனர்.
இந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருகை தருமாறு கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சந்தித்து அழைப்பு விடுத்து குறிப்பிடத்தக்கது