ஏடிபி மெயின் டிரா போட்டியில் வெற்றிபெற்ற முதல் காதுகேளாத வீரர் லீடக்ஹி!!

Must read

டிபி மெயின் டிரா டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரர் என்ற பெருமையை லீ டக் ஹி பெற்றுள்ளார்.  தென்கொரியாவை சேர்ந்த இவர் போட்டியில் வெற்றி பெற்ற  முதல் காது கேளாத வீரர்  என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற வின்ஸ்டன்-சேலம் ஓபனின் முதல் சுற்றில் தென் கொரிய  வீரரை  7-6 (4) 6-1 என்ற செட் கணக்கில் ஹென்றி லாக்சோனனை  7-6(4)  6-1 செட் கணக்கில் தோற்கடித்து லீ டக் ஹி வெற்றி பெற்றார். இதன் காரணமாக  ஏடிபி டூர் பிரதான டிரா போட்டியில் வென்ற முதல் காது கேளாத வீரர் என்ற பெருமையை லீ டக்-ஹீ பெற்றார்.

தற்போது  21 வயதான லீ டக் ஹி  வட கரோலினாவில் ஹார்ட் கோர்டுகளில் நீண்ட மழை தாமதத்திற்குப் பிறகு சிறப்பாக ஆடி வெற்றி வாகை சூடினார்.

இரண்டு வயதில் காது கேளாதவர் என கண்டறியப்பட்ட லீக்கு, ஆட்டத்தின்போது, அம்பயர்கள் அல்லது நடுவரிடமிருந்து கூறப்படும் அழைப்புகளைக் கேட்க முடியாது, மேலும் தகவல்களுக் கான சமிக்ஞைகள் மற்றும் சைகைகளை நம்பியுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த  லீ, எனது இயலாமைக்காக மக்கள் என்னை கேலி செய்தார்கள், நான் விளையாடக்கூடாது என்று நண்பர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். இது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.  இருந்தாலும் எனது சில  எனது நண்பர்களும் குடும்பத்தி னரும் எனக்கு உதவ உதவினர்.

நானும், என்னால் செய்ய முடியும் என்பதை அனைவருக்கும் காட்ட நான் விரும்பினேன் என்று கூறியவர், தற்போது  நிரூபித்து காட்டியுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

தனது இந்த செய்தி காது கேளாதவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றவர்,  நீங்கள் கடுமையாக முயற்சித்தால்,எதையும் செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

லீ டக் ஹி அடுத்தாக இன்று போலந்தின் மூன்றாம் நிலை வீராங்கனை ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் (Hubert Hurkacz ) மோதுகிறார்.

More articles

Latest article