டில்லி:

‘மோடி பயோ பிக்’ படம் வெளியாவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில உருவான  மோடியின் சுய சரிதைப் படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் படத்தை வெளியிட அதிரடியாக தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, படம் வெளியாகும்  தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது.

சந்தீப் சிங் என்பவரின் தயாரிப்பில், ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் படமாக்கப்பட்டுள் ளது. பிரதமர் மோடியாக பிரபல பாலிவுட் ஸ்டார்  விவேக் ஓபராய் நடிக்க, இந்தப் படத்தை ஓமங்குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில், மோடி பயோ பிக் படத்தை வெளியிட படத்தயாரிப்பு குழு முடிவு செய்தது.  இந்தபடத்தின்  டிரைலர்  சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரைலரின் தேர்தல் ஆதாயத்திற்காக பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் , காங்கிரஸ் உள்பட எதிர்க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டில்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதி மன்றம் படத்தை வெளி யிட தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு சென்று. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றமும், படத்தை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் கூறி வழக்கை முடித்தது.

இதற்கிடையில்,  முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மோடி பயோ பிக் படத்தை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின்  விதி  324 பிரிவின்படி படத்தை வெளியிட தடை விதிப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சந்தீப் சிங், நரேந்திர மோடி சுய சரிதைப் படம் நாளை ரிலீஸ் செய்யப்படாது என்றும், ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.