‘’ராக்கெட்’ வீசியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக லெபனான் ஜனாதிபதி திடுக்கிடும் தகவல்..
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிபொருள் இருந்த சரக்கு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 157 பேர் பலியானார்கள். 5 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விபத்து நிகழ்ந்த துறைமுகத்தில் பணிபுரிந்து வந்த நூறு தொழிலாளர்களைக் காணவில்லை.
இந்த நிலையில் லெபனான் நாட்டுக் குடியரசுத் தலைவர் மைக்கேல் ஆன் அளித்துள்ள பேட்டியில் ’’வெடிபொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கு மீது வெளியே இருந்து ராக்கெட் அல்லது குண்டு வீசியதால் , இந்த கோர விபத்து நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது’’ என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
‘’எனினும் விசாரணை முடிந்த பின்னர் தான் உண்மை தெரிய வரும் ‘’ என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் மைக்கேல், ‘’ விபத்துக்குச் சதி காரணமா? அல்லது அதிகாரிகள் அசட்டையால் விபத்து நடந்ததா?’’ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
-பா.பாரதி.