
மும்பை: வரும் 2020ம் ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.
கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பிரபலமானவர் லியாண்டர் பயஸ். அதுமுதற்கொண்டு சர்வதேச டென்னிஸ் அரங்கில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார் மற்றும் இந்தியாவின் முகமாகவும் இருக்கிறார்.
இவர், இதுவரை ஆண்கள் இரட்டையரில் 8 பதக்கங்கள், கலப்பு இரட்டையரில் 10 பதக்கங்கள் மற்றும் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பைத் தொடர் இரட்டையரில் அதிக வெற்றிகள்(44) என்று பல சாதனைகளைப் படைத்தவர்.
இந்நிலையில், இவர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “அடுத்தாண்டு சில தொடர்களில் மட்டுமே பங்கேற்கும் எண்ணம் உள்ளது. அத்துடன் ஓய்வுபெற உள்ளேன். எனக்கான ஈடுசெய்ய முடியாத மற்றும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய எனது பெற்றோர்கள், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. மேலும், ரசிகர்கள் என்னை சந்திக்கலாம்” என்றுள்ளார்.
[youtube-feed feed=1]