https://twitter.com/malyalammovieBO/status/1181063771541798917

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. கல்லூரிப் பேராசிரியராக விஜய்யும், கல்லூரி மாணவராக சாந்தனுவும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.