டெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். அப்போது மத்தியஅரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தக்கோரி கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  , சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்  மற்றும் திமுக எம்.பி.க்கள் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டு மோடி அரசுக்கு எதிராகவும், பட்ஜெட்டுக்கு எதிராகவும்  கைகளில் பதாதைகளுடன் கோஷமிட்டனர்.

ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் அணி), திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பதாகைகளுடன் முழக்கமிட்டு வருகின்றனர். தமிழ்நாடும் இல்லை.. திருக்குறளும் இல்லை, தமிழகத்துக்கு நிதி எங்கே போன்ற பதாகைகளுடன் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்து வெளியே காங்கிரஸ் உள்பட இண்டியாக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் குறித்து, காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “… இது ‘குர்சி பச்சாவ் பட்ஜெட்’, ‘சட்டா பச்சாவ் பட்ஜெட்’, ‘பட்லா லோ பட்ஜெட்’. நாட்டின் 90%க்கும் அதிகமான மக்கள் இந்த பட்ஜெட் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… மோடி அரசு பாஜக அரசைக் காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றார்.