நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
101 தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் விவாசாயத்தில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை, நதிநீர் அதிகரிப்பு, நீர்ப்பாசனம், ஆரோக்கியம் உள்ளிட்டவை பற்றி பேசினர். நிகழ்ச்சியில்
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் K. செல்லமுத்து அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டுஇயக்கத்தின் மாநில தலைவர் திரு K .A . சுப்ரமணியம் அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் திரு நல்லசாமி அவர்கள், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் திரு K.V. ராஜ்குமார் , தமிழக காவேரி விவசாய சங்கத்தின் R தண்டபாணி, காந்திப்பித்தன், K.V இளங்கீரன், TPK . ராஜேந்திரன் அவர்கள், எழுத்தாளர் திரு தூரன் நம்பி அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் பேசுகையில், ‘விவசாயிகள் சேர்ந்தாலே மறியல் செய்ய, புரட்சி செய்ய எனும் எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. இப்போது நாம் மறியல் செய்ய சேரவில்லை, (விவசாயிகள்) நம் பொருளாதாரத்திற்காக நாம் கூடுத் தேவையிருக்கிறது.
நாட்டின் 40 சதவிகித நிலம் விவசாயிகளிடம் இருக்கிறது. நாம் ஒரு மகத்தான சக்தயாக நாம் செயல்பட வேண்டும். இதனை தமிழ்நாட்டில் துவங்கி, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். சின்ன சக்தயாக இருப்பவர்கள் பெரிய சக்தயாக மாறுவது விவசாயிகள் மத்தியில் சிறிய அளவில் நடந்திருக்கிறது. அது மிகப் பெரிய அளவில் நடக்கவேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் அனைவரும் சேர்ந்தால்,பெரிய நிறுவனம் தானே? இதனால், விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்புரிந்து பெரிய சக்தியாக செயல்பட வேண்டும்.
தற்போது நம் நாட்டில் தனி விவசாயிக்கு வரி இல்லை, உழவர் விற்பனையாளர் சங்கத்திற்கு ( FPO) வரி இருக்கிறது. இதுகுறித்து நாம் பிரதமரிடம் பேசினோம், இப்போது வரியை விலக்கிஇருக்கிறார்கள்.
40 சதவிகிதம் நிலம் நம்மிடம் இருக்கு, மக்கள் உணவு நம்மிடம் இருக்கு, நாம் ஏன் மறியல் செய்யனும். நம்ம சக்தி என்னன்னு நாம்ம வெளிப்படுத்தனும். இவ்வளவு சக்தி கூடினால், வருங்காலத்தில் அரசு யாருடையதாக இருக்கவேண்டும்? விவசாய அரசாகத்தானே இருக்க வேண்டும். நாம் ஒன்றாக கூடாததால் பலவீனமானவர்களாக இருக்கிறோம்.
இன்று நீர் மற்றும் நிலம் வளமில்லாமல் இருக்கிறது.
தென்னிந்தியாவில் இருந்து இமயமலை வரை உலகத்தில் இருக்கும் எல்லா பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை நமக்கு இருக்குது. ஆனால், நீர் இல்லாத இடத்தில் கரும்பையும் நெல்லையும் விதைக்கிறோம்.
வியட்நாம் போன்ற நாடுகளில் சில விவசாயிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நம் விவசாய பல்கலைக்கழகங்களில் பயின்று அந்த விஷயங்களை செய்லபடுத்தி வெற்றி கண்டுள்ளார்கள். நம் முன்னோர்களக்கு எல்லாம் தெரிந்த விஷயங்கள் இவை. நிலத்தில் தேவையான அளவு கால்நடைகள், மரங்கள் விலங்குகள் இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தது. இதனால் தான் மண் வளமாக இருக்கும்.
தமிழ்நாடு விவசாயிகளக்காக நாம் ஒரு ஆப் (APP) செய்ய விருப்பம் இருக்கிறது. அதில் விவசாயம் சார்ந்த அனைத்து தகவல்களும் இருக்கும்.
இன்று 15 சதவிகிதம் விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை விவாசயத்திற்கு செல்ல விரும்பவில்லை.
நம் விவசாயிகள் எந்த படிப்பும் இல்லையென்றாலும் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனை நாம் வெளிநாட்டிற்கு விட்டுக்கொடுத்தால் நாம் அவர்களுக்கு அடிமைதானே? முன்னர் வெளிநாட்டினர் நம்மை ஆட்சிசெய்த போது, உணவு நம் கட்டுபபாட்டில் இருந்தது. ஆனால், இன்று விவசாயம் வெளிநாட்டினர் கைகளுக்கு சென்றுவிட்டால், அவர்கள் காலில் நாம் கிடக்க வேண்டியதுதான். நாம் அரசிடம் மிக அதிகமாக பேசி விட்டேன்.
என் மனதில் இந்த விஷயங்கள் இருக்கின்றன – நீர்பாசனம், மின்சாரம் மற்றும் பம்ப். இவற்றை பற்றி ஏதோ செய்ய வேண்டும்.
விவசாயி தற்கொலை நிறுத்த உங்களக்கு மனம் இருந்தால் இரண்டு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்று அரசிடம் சொன்னேன். நீர்பாசனம், பம்ப். மற்றும் மருத்துவ தேவைகளின் கவனிப்பு .
இப்போது மருத்துவ தேவைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்துக்கு அரசு கொடுக்கும். இதனால, பெரிய அளவிலான கடன் தேவை குறையும் . அவர்கள் கொடுக்கும் பாலிசியை நாம் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டம். இதற்கு நாம் இணைந்து இருக்கவேண்டும். சங்கம், யூனியன் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை, உழவர் விற்பனையாளர் சங்கம் (FPO) வேண்டும்.
மரம் வளர்த்தால் அந்த மரம் அந்த மனிதனுக்கு சொந்தம் என்கிற சட்டம் வரவேண்டும்.
இதை பற்றி அரசிடம் பேசுவோம். இல்லையென்றால், நாம் சுப்ரீம் கோர்டில் பைல் போடுவோம். சொந்த நிலத்தில் சந்தன மரம் நட்டால், அதற்கு நாம் உரிமை. நம் நாட்டில் வெறம் 5 அடி மட்டும்தான் நமக்கு சொந்தம், என்பதை நாம் மாற்ற வேண்டும். நம்ம நிலத்தில் எது இருந்தாலும் அது நமது தான்.
அரசுடைய ஈடுபாடு இல்லாமல் தீர்வு வராது. தீர்வுவர வேண்டும் என்றால் அரசின் ஈடுபாடு தேவை. இதற்கு முதலீடு தேவை. . எங்கு பணம் முதலீடு செய்யப்படும்? எங்கு வருமானம் இருக்கிறது என்று காட்டுகிறோமோ அங்குதான் முதலீடு செய்யப்பப்படும்.
நாம் நம்மிடம் முதலீடு செய்தால் பலன் இருக்கிறது என்பதை காட்ட வேண்டும்’, என்றார்
நதிகளை மீட்போம் இயக்கம்
ஈஷா அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்ட நதிகளை மீட்போம் இயக்கமானது நாடெங்கிலும் நதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சத்குரு அவர்கள் நாடெங்கிலும் சுமார் 9000 கி மீ இமயம் முதல் குமரி வரை தாமே வாகனம் ஒட்டிச் சென்று நதிகளை பற்றிய விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தினார். இதில் சத்குரு அவர்கள் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 23 நகரங்களில், 145 நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்நிகழ்ச்சிகளில் 10 மாநில முதல்வர்கள் மற்றும் 3 ஆளுநர்கள் பங்கேற்றனர். புதுதில்லியில் நடந்த நிறைவு விழாவில் துணை ஜனாபதி அவர்கள் பங்கேற்றார். 16.18 கோடி மக்கள் இவ்வியக்கத்திற்கு தங்களது ஆதரவை பதிவிட்டுள்ளனர். நிபுணர்களுடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை உருவாக்கியுள்ள திட்டப் பரிந்துரைகளை சத்குரு அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினார்.