தவியேற்பு, விபத்து, போர், இயற்கை  பேரழிவு போன்ற செய்திகள் எல்லாம் அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரிதான் வெளியாகும். அப்படித்தான் வெளியாக முடியும்.

ஆனால் கட்டுரைகள் என்பது அந்தந்த பத்திரிகைகளில் பிரத்யேகமாக வெளியாகும். ஒரு இதழில் வெளியாகும் கட்டுரை இன்னொரு இதழில் அப்படியே வெளியாகாது.

ஆனால் , 2009ம்  வருடம் டிசம்பர் 7ம் தேதி, குறிப்பிட்ட கட்டுரை ஒன்று 45 நாடுகளைச் சேர்ந்த, 56 நாளிதழ்களில் வெளியானது.

அது… பதவியேற்பருவ மாற்றம் தொடர்பாக “Copenhegan: seize the chance” என்ற தலைப்பிலான கட்டுரை.

இங்கே, தி இந்து (ஆங்கிலம்)  இதழில் முதல் பக்கத்தில் பொதுத்தலையங்கமாக வெளியிட்டது.

அதற்கு முன்னர் இப்படி, ஒரே கட்டுரை ஒரே நாளில் பல இதழ்களில் வெளியானதில்லை.

இப்படி, ஒரே கட்டுரை பல இதழ்களில் ஒரே நாளில் வெளிவருவதை Syndicated article என்று கூறுவார்கள்.

அதே போல, சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று புதுதில்லியில்   ஆசியன் அமைப்பின் 10 நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்திய ஆசியன் உறவைக் குறிக்கின்ற வகையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி   “Shared values, common destiny” என்ற கட்டுரையை எழுதினார்.

இதை, 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 27 பிரபல நாளிதழ்கள் ஒரே நேரத்தில்  வெளியிட்டன. கம்போடியா, இந்தோனேசியா, வியட்னாமிஸ், பர்மிஸ், மலாய், தாய், லாவோ, மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் வெளியானது.

இவற்றில் சிங்கப்பூர் (தமிழ் முரசு) மற்றும் மலேசியா (தமிழ் நேசன், மக்கள் ஓசை) ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்களும் உண்டு.

கட்டுரைகள் வெளியான இதழ்கள்…

·  கம்போடியா: 1) Rasmei Kamuchea, Cambodian 2) Phnom Penh Post, English

·  இந்தோனேசியா: 1) Kompas, Bahasa Indonesia 2) Jakarta Post, English

·  வியட்நாம்: 1) Tuoi Tre, Vietnamese 2) Vietnam News, English

·  மியான்மர்: 1) Myanmar Times, English 2) Global New Light of Myanmar, English  3) Myanmar Alin, Burmese 4) Mizzima, English

·  புருனேய்:  1) Media Permata, Bahasa Malay 2)  Borneo Bulletin, English

·  தாய்லாந்து: 1)  Bangkok Post, English 2)  Post Today, Thai

·  லாவோஸ்:  1) Vientiane Mai, Lao language  2) Vientiane Times, English

·  பிலிப்பைன்ஸ்: 1)  Manila Bulletin, English

·  சிங்கப்பூர்:  1) Strait Times, English  2) Business Times, English   3) Tamil Murasu, Tamil 4) Lianhe Zaobao Mandarin 5) Berita Harian, Basha Malay, 6) Tabla, English

மலேசியா: 1)  Berita Harian, Bahasa Malay  2) The Star, English 3) Tamil Nesan, Tamil 4) Makkal Osai, Tamil

அந்த கட்டுரையில் மோடி தெரிவித்தது என்ன?

இந்தியாவின் குடியரசு தினத்தில் புதுதில்லியில் நடைபெறுகின்ற சிறப்பு நிகழ்ச்சியில் மதிப்புமிக்க 10 நாட்டுத் தலைவர்களை இந்தியாவின் 125 கோடி மக்கள் வரவேற்கப் பெருமைப்படுகிறார்கள் என்று தன் கட்டுரையை ஆரம்பிக்கின்ற பிரதமர் மோடி, ஆசியன் நாடுகளுடனான நட்பு முக்கியத்துவம் பெற்றது என்றும், இது ஒரு வரலாற்று நிகழ்வும் என்றும் கூறுகிறார். இந்திய ஆசியன் நட்பானது 25 ஆண்டுகள்தான் என்றாலும் இந்தியா, தென் கிழக்கு ஆசியாவுடன் கொண்டுள்ள உறவானது 2000 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், அமைதி மற்றும் நட்பின் அடிப்படையில் சமயம், பண்பாடு, கலை, வணிகம், மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் இந்நாடுகள் பின்னிப்பிணைந்துள்ளன என்றும், இந்தியாவுடனான வணிகம் தொன்மை வாய்ந்தது என்றும்  கூறுகிறார்.

இந்தியாவும் ஆசியனும் இணைந்து பலவற்றைச் சாதித்துள்ளன என்றும், இந்த உறவானது கிழக்கு ஆசியா உச்சி மாநாடு, ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், ஆசியன் பிராந்திய அமைப்பு என்ற நிலைகளில் பரிணமிக்கின்றன என்றும், இதன் மூலமாக இப்பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் கூறுகிறார்.

இந்தியாவிற்கும் ஏசியன் நாடுகளுக்கும் இடையே போட்டியோ பொறாமையோ இல்லை என்றும், எதிர்காலத்திற்கான தெளிவான இலக்கு ஆசியன் நாடுகளின் வலிமை, பரப்பு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு  வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நல்ல தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது என்றும் கூறுகிறார். ஆசிய நாடுகளுடன் அதிகமாக வணிகம் செய்யும் நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.

நான்கு ஆசியன் உச்சி மாநாடுகளிலும், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் கலந்துகொண்ட வகையில் ஆசியன் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டினை தன்னால் உணரமுடிகிறது என்றும், இந்தியாவுடன் வணிக உறவு வைத்துக்கொள்வது தற்போது மிகவும் எளிதாக உள்ளது என்றும், நண்பர்கள் என்ற நிலையிலும் அண்டை வீட்டார் என்ற நிலையிலும் ஆசியன் நாடுகள் புதிய இந்தியா வடிவம் பெற மிக முக்கியமான பங்களிப்பினைத் தருவார்கள் தான் நம்புவதாகவும் கூறுகிறார்.

ஆசியன் நாடுகளின் வளர்ச்சியைக் கண்டு வியப்பதாகக் கூறும் அவர், காலத்திற்கேற்றபடி எச்சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் தயாராக இருப்பதாகவும் அதற்கான வசதிகள் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றன என்றும், ஒரு நல்ல நம்பிக்கையிலான எதிர்காலத்திற்கு அமைதி தேவை என்றும், இது மாற்றத்திற்கான காலம் என்றும் கூறுகிறார்.

ஏசியன் நாடுகளும் இந்தியாவும் உலக மற்றும் இப்பகுதியின் அமைதியான மற்றும் நிலையான எதிர்காலத்தை நிர்ணயிக்க பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளன என்றும், அழகான சூரியோதயத்திற்காகவும், வாய்ப்புகளுக்காகவும் இந்தியா எப்பொழுதும் கிழக்கு நோக்கியே தன் பார்வையை  செலுத்துகிறது என்றும் கூறுகிறார். எப்போதும்போல இப்போதும் கிழக்கு அல்லது இந்திய பசிபிக் பகுதி என்பதானது எதிர்கால இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக அமையும் என்றும் கூறுகிறார்.  இதில் ஆசியன் மற்றும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியப்பங்கு வகிக்கும் என்றும், இந்த இலக்கு நோக்கிய பயணத்திற்காக தில்லியில் ஆசியன் நாடுகளும் இந்தியாவும் தன் நிலைப்பாட்டை புதுப்பித்துக்கொள்வதாகவும் பெருமிதம் கொள்வதாகக் கூறி கட்டுரையை நிறைவு செய்கிறார்.

கொசுறு:

Syndication என்பதற்கு The sale or licensing of material for publication or broadcasting by a number of television stations, periodicals etc. என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.  Syndicated என்பதற்கு (of articles and photographs) sold to different newspapers and magazines for publishing என்று கேம்பிரிட்ஜ் அகராதி  கூறுகிறது.

– முனைவர் பா.ஜம்புலிங்கம்