திருப்பதி
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் அடைந்ததற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகிய 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஆந்திர மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்,
“ஆந்திராவின் திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது’
என்று ப்திந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில்
“உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். இந்த கடினமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.
, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ‘எக்ஸ்’ தளத்தில்,
”திருப்பதி கோவிலில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த ஆன்மாக்களுக்கு கடவுள் அவரது பாதங்களில் இடம் கொடுப்பாராக. காயமடைந்த பக்தர்கள் விரைவில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.