காசா: பாகிஸ்தானின் முன்னணி பயங்கரவாதியான , லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாலஸ்தீனம் பகுதியான காஸாவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனார்.
இஸ்ரேன் பாலஸ்தீனம் இடையே கடந்த 15 நாட்களாக போர் நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி காஸாவில் முகாமிட்டுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது சுமார் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காஸாவை முற்றிலுமாக அழித்துவிட இஸ்ரேல் தீர்மானித்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 4,500-க்கும் மேற்பட்ட காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணித் தீவிரவாதியும், லஷ்கர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார். அப்போது, காஸாவில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹஷிம் அலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இத்தகவலை டைம்ஸ் அல்ஜீப்ரா செய்திச் சேனல் உறுதிப்படுத்தி இருக்கிறது. லக்ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு, அத்தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தகவல், அந்த அமைப்பினரிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.