சென்னை:

க்கள் நெரிசல் மிகுந்த பிராட்வேயின் என்.எஸ்.சி. போஸ் சாலையை சமீப காலமாக வழக்கறி ஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கையகப்படுத்தி வருகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கும் காட்சி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மொத்த காய்கறி, பழம், பூங்கள் மொத்த விற்பனை இடமாக திகழ்ந்து வந்த சென்னையின் பிரதான பூக்கடை மற்றும் பிராட்வே, அங்குள்ள வணிக நிறுவனங் களை கோயம்பேட்டுக்கு மாற்றியதை தொடர்ந்து களையிழந்தது.

இடையில் மீண்டும் பலர் சாலையோரங்களில் கடைகள் பரப்பி விற்பனையில் ஈடுபட, கடுமை யான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,  என்.எஸ்.சி. போஸ் சாலையில்  பொதுமக்கள் நடைபாதையில் செல்லமுடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.  பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வியாபாரம் இல்லாத பகுதியாக பராமரிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி காவல்துறையினர் உதவியுடன் சுமார் 350க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை சீர் படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்

இந்த நிலையில், சமீப காலமாக வழக்கறிஞர்கள் சாலையில் ஒரு பகுதியை தங்களது வாகனங் கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் ஒரு பகுதியில் மட்டும் ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினரிடம் பலர் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் வழக்கறிஞர் களிடம் பேச தயங்கி வருவதால், பாரிமுனை பகுதியில் தொடர்ந்து போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

மெயின்ரோட்டிலேயே சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மூன்று வரிசைகளில் வாகனங் களை நிறுத்தி வருகிறார்கள். என்.எஸ்.சி போஸ் சாலை முழுவதும்   முழு வாகன நிறுத்துமிட மாக மாறி உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் நடக்கக்கூட கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது.

இதுகுறித்து கூறிய சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்,  வழக்கறிஞர்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான பார்க்கிங்  இடம் இல்லாததால் இது நிகழ்கிறது. எங்கள் சங்க உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை அளித்தோம், ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இந்திய பார் கவுன்சில் மெம்பர் பிரபாகரன்

இந்திய பார் கவுன்சிலின் இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன்  இதுகுறித்து கூறும்போது,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. என்.எஸ்.சி போஸ் சாலையில் பெரும்பான்மையான இடம் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வக்கீல்கள் எங்கே நிறுத்துவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள கடைகளிலிருந்து வரும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை வளாகத்தில் நிறுத்தி எங்களுக்குக் கிடைக்கும் மிகச்சிறிய இடத்தையும் அபகரித்து கொள்கிறார்கள் என்று காட்டமாக கூறி உள்ளார்.

வழக்கறிஞர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக  அரசு, உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் பல மாடி பார்க்கிங் வசதியை அமைத்து தருவதாக  உறுதியளித்தாகவும், ஆனால் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டுக்களை வழக்கறிஞர்கள்  தெரிவித்து உள்ளனர்.

வழக்கறிஞர்கள் என்னதான் காரணம் கூறினாலும், மக்கள்  மற்றும் மக்களுக்காக பயன்படும் ஒரு பொது சாலையை, தங்களது சொந்த வாகனங்கள் நிறுத்த பயன்படுத்திக் கொள்வது எந்த வகையில் நியாயம்?

சாதாரண பிரச்சினைக்கு கூட ஒன்றுகூடி குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்,  மக்கள் பயன் படுத்தும் பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ளதும், அதை காவல்துறையினர் கண்டு  கொள்ளாமல் இருப்பதும் அந்த பகுதியில் உள்ள வணிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம், என்எஸ்சி போஸ் சாலையில், வாகனங்கள் நிறுத்தவோ, கடைகள் போடவோ தடை விதித்துள்ள நிலையில், வழக்கறிஞர்களே நீதிமன்றத்தின் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி மீண்டும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கி உள்ளது அந்த பகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

சாலையை ஆக்கிரமித்து வழக்கறிஞர்களே நீதிமன்ற உத்தரவை மீறியிருப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமா?