சென்னை: அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 8ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து உள்ளனர்.
தமிழகம் கொரோனா தொற்று மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, , மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் அனுமதி என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும், லா சேம்பர்ஸ் அறையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், வரும் 8ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லா சேம்பர்ஸ் எனப்படும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுவதால் தங்களுடைய பணிகள் பாதிக்கப்படும் எனக்கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.