லக்னோ:

முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டக்கல்லூரி நிறுவனருமான சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறி, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த சட்டக்கல்லூரி மாணவியும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, பணம் பறித்தல் வழக்கில் அந்த மாணவி கைது செய்யப்பட்டுளளார்.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது சட்டக்கல்லூரியில் படித்த ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி   சின்மயானந்தா பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் கொடுத்தார்.

இவரது புகார் தொடர்பாக உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் பேரில் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து,பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், கடந்த 20 ஆம் தேதி சின்ம யானந்தா கைது  செய்யப்பட்டு ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அப்போது மாணவியின் தந்தை சின்ம யானந்தா மாணவியிடம் சில்மிசம் செய்ததாக 40 வீடியோக்களையும், ஆடியோக்களையும் சமர்ப்பித்தார்.

இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சின்மயானந்தா பாலியல் துஷ் பிரயோகம் செய்தை அந்த மாணவி திட்டமிட்டே வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஒருவர் 40 முறை தவறாக நடந்ததை அந்த மாணவி எப்படி அனுமதித்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், அந்த மாணவி சின்மயானந்தாவிடம், வீடியோவை காட்டி பணம் பறித்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில்,  மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கில்  அந்த மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் பெண் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தொடர்ந் திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு விசாரணைக் குழுவில்  பணம் பறித்தல் வழக்கில் குற்றச்சாட்டு கூறிய மாணவிக்கு  தொடர்பு உள்ளது  சிறப்பு விசாரணை குழு விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, மாணவி கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே புகார் கூறிய அந்த மாணவி மற்றும் அவரது மூன்று நண்பர்களும் பாலியல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக சின்மயானந்தாவிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து மாணவியின் நண்பர்கள் 3 பேர் ஏற்கனவே  கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.