டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளது. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, கொலிஜியத்தின் பரிந்துரையை அனுப்பி வைக்கும்படி சட்ட அமைச்சர் கோரியிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற 48வது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவினன் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆகஸ்டு 27ந்தேதி பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம்த நவம்பர் 8ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போது, உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவரே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது. அதன்படி பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறை. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித் பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல்,
எனவே, சீனியாரிட்டிபடி உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக ஜே. சந்திரசூட் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தஉள்ளது. மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
29.03.2000 அன்று பம்பாய் உயர்நீதி மன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். மகாராஷ்டிரா நீதித்துறை கல்வி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டார். 31.10.2013 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 13.05.2016 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.