சூப்பர் ஸ்டார் ரஜினி மனைவி லதா ரஜினி, அன்பு ஒன்றுதான் உலகில் சிறந்தது’ என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவில் 2kuழந்தைகளுடன அவர் அன்பை பகிரும் ஆட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அன்பின் முன்பு எல்லாமே மறந்து போகும், ’பொல்லாமை தீமை கோபமெல்லாம் வெல்லும் பிறக்கும்போது அன்புடன் வருவான் இருக்கும்போது வெறுப்பினில் வாழ்வான் ..’ போன்ற தத்துவார்த்த வரிகள் அப்பாடலில் இடம் பெற் றுள்ளது.
பீஸ் பார் சில்ட்ரன்ஸ் (Peace for Children) என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் வளர்ச்சிக்காக பணிகளாற்றும் லதா ரஜினிகாந்த் எழுதி இசை அமைத்து இப்பாடலை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர்கள் தனுஷ், ராகவா லாரன்ஸ் இப்பாடலை தங்களது இணைய தள பக்கங்களில் வீடியோவுடன் பதிவிட் டிருக்கின்றனர்.
பாடல் மற்றும் லதாரஜினி பற்றி தனுஷ் கூறும்போது, ’குழந்தைகளையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட தாய் உள்ளத்தில் இருந்து ஒரு பாடல் .. அற்புதம் !!! அன்புதானே எல்லாமே என தெரிவித்திருக்கிறார். அதுபோல் லாரன்ஸும் வாழ்த்து தெரிவித்திருக் கிறார்.
Patrikai.com official YouTube Channel