டெல்லி: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 5வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்., இதையொட்டி, அவர் நிதியமைச்சத்தில் இருந்து நாடாளுமன்றம் புறப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால், நடுத்தர மக்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு காலை 9மணிக்கே வருகை தந்தார். அங்குள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர், 9,.30 மணி அளவில் அங்கிருந்து நாடாளுமன்றம் புறப்பட்டார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, ஜனாதிபதி முர்முவை எஃப்எம் சீதாராமன் சந்தித்தார்
நாடாளுமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்களை பார்த்து கையைசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.