மும்பை

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டததால் பங்குகள் விற்பனைக்கான டெண்டர் கோர கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.   ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் நிறுவனத்திடம் பணம் இல்லாத நிலை உள்ளது.   நிர்வாக செலவுகளுக்கு போதுமான நிதி இல்லாததால் பல சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.   இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் கடன் அளித்தவர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தை திவாலான நிறுவனம் என அறிவிக்காமல் வேறு நிறுவனத்திடம் பங்குகளி விற்று நிறுவனத்தை நடத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.   மேலும் இதன் மூலம் வங்கிகள் அதிகம் நஷ்டமடையாது என்வும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.    அதை ஒட்டி ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடன் கொடுத்தோர் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தை தொடர்ந்து நடத்தக் கோரி டெண்டர் விளம்பரம் அளித்தது.

ஆனால் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விலை கடுமையாக சரிந்துள்ளது.   எனவே இதை வாங்குவதில் அதிகமானோர் விருப்பம் தெரிவிக்கவில்லை.   உலகின் பல பெரிய விமான நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்தன.   ஆனால் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட விலை மிகவும் குறைவாக உள்ளதால்  இந்த பேரத்துக்கு கடன் கொடுத்தோர் ஒப்புதல்  தரவில்லை.

இந்த பங்குகளுக்கான ஒப்பந்த புள்ளி அளிக்க கடைசி தேதியாக ஏப்ரல் 12 குறிப்பிடப்பட்டிருந்தது.     இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டோர்  கடைசி தேதியை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளனர்.  மேலும் இந்த டெண்டருக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.    இந்த நிறுவனத்தை நடத்த விருப்பம் இன்றி பங்குகளை வாங்குவோருக்கும் மற்றும் கடனாக நிதி அளிப்போருக்கும்  தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.