டெல்லி: நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக  1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8வது  நாளாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி இருப்பது சுகாதாரத்துறையினருக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளை மீண்டும் கொரோனாவின் 2வது அலை மிரட்டி வருகிறது. இதன் பரவல் வெகுவேகமாக இருப்பதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து இந்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரை நிலவரத்தை வெளியிட்டு ஒள்ளது.

அதன்படி கடந்த  24 மணி நேரத்தில், புதியதாக 1,61,736 பேர் தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில்,  879 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.25% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  97,168 பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 89.51% ஆக உயர்ந்துள்ளது

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  12,64,698 பேர் தொற்று பாதிப்புக்கு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுவோர் விகிதம் 9.24% ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.