இங்கிலாந்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள், 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு மிகப்பெரிய சோதனையைத் தொடங்கவுள்ளனர். இன்னும் சில வாரங்களில் ஒரு சரியான முடிவை எதிர்பார்க்கலாம்.
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உலகின் மிகப்பெரிய மருந்து சோதனை, இதற்கு முன் எப்போதும் இல்லாதவாறு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், இன்னும் சில வாரங்களுக்குள், சரியான பதில்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது. இந்த பரிசோதனை, இன்னும் மாதத்திற்குள், இங்கிலாந்தில் உள்ள சுமார் 165 தேசிய சுகாதாரத் துறை மருத்துவமனைகளில் 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளில், செய்யப்படவுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதேபோன்ற சோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும், அது வெறும் சில நூறு நோயாளிகளை மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு இருந்தனர். எனவே, “இது இதுவரை செய்யபடாத, உலகின் மிகப்பெரிய சோதனை” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் தொற்று நோய்கள் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தின் பேராசிரியர் பீட்டர் ஹோர்பி கூறினார். அவர் முன்னர் மேற்கு ஆப்பிரிக்காவிலும், காங்கோ ஜனநாயக குடியரசிலும் (டி.ஆர்.சி) எபோலா வைரஸ்க்கு எதிரான மருந்து சோதனைகளுக்கு தலைமை தாங்கியவர். இந்த சோதனைகள் மேற்கொள்பவர்கள், கோரோனாவுக்கான சரியான வழிமுறைகளை கண்டறியும் முதல் நபர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ” இந்த சோதனையின் முடிவுகள் ஜூன் மாதத்தில் கிடைக்கலாம். இந்த வெற்றியடயுமனால், கொரோனாவிற்கு ஒரு சரியான முடிவு கிடைக்கும். ஆனால் கோவிட் -19 விஷயத்தில், கதைகளில் வரும் ஒரு மேஜிக் புல்லட் போன்றெல்லாம் எதுவும் இருக்காது” என்று அவர் எச்சரித்தார்.
(CAMBRIDGE UNIVERSITY)
தற்போது உலகெங்கிலும் கொரோனாவிற்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், வேறு வழியில்லாத மனிதாபிமான அடிப்படையில், அறிவியல் ரீதியான பரிசோதனைகள் மற்றும் ஆதாரங்கள் இல்லாத மருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் பரிந்துரைக்கின்றனர். பல்வேறு அரசுகளும், தலைவர்களும் திணறி வருகின்றனர். மலேரியா எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின் மருந்தை, பக்க விளைவுகள் இருந்த போதிலும் டிரம்ப் போன்றோர் ஆதரித்துள்ளார். அசித்ரோமைசின் என்ற ஆண்டிபயாடிக் உடன் சேர்த்து இந்த குளோரோகுயின் பயன்படுத்தப்படுகிறது. இது “மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை உண்டாக்க கூடியதாக இருக்கலாம்” என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இந்த கலவையானது ஒரு குணமளிக்கும் சிகிச்சை என்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது என்றும் பிரெஞ்சு மருத்துவர் டிடியர் ரவுல்ட் கூறியுள்ளார். ஜனாதிபதி மக்ரோன் கடந்த வாரம் மார்சேயில் உள்ள ரவுல்ட் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது இந்த மருந்தை ஆதரிப்பதாக தெரிவித்தார். ஆனால் முறையான பரிசோதனைகள் தேவை என்று பரிந்துரைத்தார். சோதனையின் ஒரு பகுதியாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் இரண்டும் தனித்தனியாக பரிசோதிக்கப்படுகின்றன. மருந்துகள் தனித்தனியாக கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால், மருந்துகள் கொடுக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டு, அவை பின்னர் இணைத்து பயன்படுத்தப்படும்.
சமூக ஊடகங்களிலும், மின்னஞ்சல்களிலும் கூறப்படும் தரவு மற்றும் தகவல்களில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் குணமாக்கும் திறன் பற்றி பலர் கூறினாலும் எதுவும் இதுவரை அறிவியல் பூர்வமாகவும், சிகிச்சியின் முடிவுகளில் இருந்தும் இதுவரி நிரூபிக்கவில்லை. “இது வைரஸை தடுக்கிறது என ஆய்வகத்தில் மட்டுமே நிறோபிக்கப்பட்டது. எவ்வித மருத்துவரீதியான சிகிச்சை மற்றும் முடிவுகள் மூலமான நிரூபணம் இல்லை. இந்த மருந்தின் உபயோகம் பற்றிய ஏராளமான ஆய்வு முடிவுகள் தினமும் வெளியிடப்படுகின்றன. ஆனால் எந்த ஒன்றிலும் உறுதியான தரவு இல்லை. அவைகளில் பெரும்பாலும் மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. சில ஆய்வு முடிவுகள் குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் குணமடைவதாக காட்டியுள்ளனர். ஆனால், குனமடைவோரின் அந்த விகிதம், நாம் எந்த மருந்தை உபயோகித்தாலும், உபயோகிக்கவில்லை என்றாலும் நாம் காணலாம்.” இந்த விதமான மிகைப்படுத்துதல் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு மிகுந்த அழுத்தத்தையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன,” என்றார்.
இங்கிலாந்து முழுவதும் பல்வேறு சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையே அவர்கள் வெளியிடும் முடிவுகளை நம்ப வைக்கிறது. இங்கிலாந்தில் உள்ள கோவிட் -19 நோயாளிகளில் பத்து சதவீதம் பேர் பல்வேறு சோதனைகளில் பங்கேற்கின்றனர். மேலும் அதிகமானோர் இதி இணையவுள்ளனர். விரைவில் சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இப்போது பரிசோதனையில் எச்.ஐ.வி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இரண்டு ஆன்டி-ரெட்ரோ வைரல் மருந்துகள், கலெட்ரா என்ற பிராண்ட் பெயரால் அறியப்படும் லோபினாவிர்-ரிடோனாவிர் மற்றும் குறைந்த அளவிலான டெக்ஸாமீதாசோன், பொதுவாக தொற்றுகளில் ஏற்படும் வீக்கம் போன்ற எதிர் விளைவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை ஸ்டீராய்டு போன்றவை நம்பிக்கை தரும் சோதனையில் உள்ளன. இது தவிர, முடக்கு வாதத்தில் பயன்படுத்தப்படும் சில சைட்டோகைன் என்ற உடனடி நோய் எதிர்ப்பு செயல்பாட்டு புரதங்களில் ஒன்றான இன்டர்லூகின் 6-க்கு எதிராக செயல்படக் கூடிய இம்யூனோமாடுலேட்டர் (நோயெதிர்ப்பு பண்பை மாற்றி அமைக்கும் தன்மை) தன்மைக் கொண்ட மருந்துகளும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளன,” என்று ஹார்பி கூறினார்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தில், கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடி என்ற எதிர்ப்பு புரதங்கள் இருக்கும் என்பதால், அதனை உபயோகப்படுத்தும் யோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. Remdesivir, மருந்தையும் பயன்படுத்தும் யோசனைகள் பரிசீலனையில் உள்ளன. ஆனால், அந்த மருந்து சீனா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த சோதனைகளில், மறுஉருவாக்கப்பட்ட மருந்துகள் தேர்வில் முதல் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவைகள் ஏற்கனவே பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு இந்த மருந்துளில் ஒன்றை தோராயமாக கொடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. இவ்வாறு சுமார் 500 முதல் 900 நோயாளிகள் மற்றும் ஒப்பீடு குழு 2,000 பேர் சோதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சோதனை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்று வருகிறது. குழு தனது ஆதரவைப் பெறுவதற்காக தலைமை மருத்துவ அதிகாரியான கிறிஸ் விட்டியைப் பார்க்கச் சென்று ஒன்பது நாட்களுக்குப் பிறகு முதல் நோயாளியைச் சேர்த்தது. NHS மற்றும் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, முதல் இரண்டு வாரங்களுக்குள் 1,000 நோயாளிகளை இந்த சோதனையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
ஹார்பியுடன் இணைந்து இந்த பரிசோதனை முயற்சியை ஒருங்கிணைக்கும் நஃபீல்ட் மக்கள்தொகை மற்றும் சுகாதாரத் துறையின் மருத்துவம் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறுகையில் “இது ஒரு அசாதாரண முயற்சியாகும். இந்த தொற்றுநோய் ஒரு முடிவுக்கு வரும்போது உலகின் நிலபரப்பில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்றார். இந்த நோய நமக்கு தரும் செய்தி என்னவெனில் “இது உங்களுக்குச் சொல்லும் ஒரு விஷயம் என்னவெனில் உள்ளுணர்வுகளுக்கு மாறான விசயங்களை செய்ய வேண்டியுள்ளபோது, அவர்கால் மறுக்க இயலாது என்பதே ஆகும்” என்று 20 ஆண்டுகளாக பேராசிரியர் பணியாற்றிய லாண்ட்ரே கூறினார். இவர் ஆக்ஸ்போர்டின் ஒருங்கிணைந்த பல இருதய மருந்து பரிசோதனைகளில் பங்கெடுத்தவர். இப்போதுள்ள சூழ்நிலையைக் காணும்போது பொதுவான விதிமுறைகளின்படி இங்கிலாந்தில் மருத்துவ பரிசோதனைகளின் வேகத்தைக் விதிமுறைகளுக்குட்பட்டு குறைத்தல் என்பது குறைந்தபட்சம் அடுத்த சில ஆண்டுகளுகேனும் திரும்புவது கடினம் என்கிறார். இரண்டாவது அசாதாரண விஷயம் என்னவென்றால், நோயாளிகளுக்கான சிகிச்சையும், அதே மருந்தின் மீதான பரிசோதனையும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் எதோ ஒரு ஓரத்தில் நடந்துக் கொண்டிருப்பது முன்னெப்போதும் நடக்காத ஒன்று என்பதாகும். ஏனெனில், எந்த நோயாளிக்கு எந்த மருந்து கொடுப்பது என்பதும், எந்த மருந்து குணமளிக்கும் என்பதும் அந்த மருத்துவருக்கும் தெரியாது என்பதே உண்மை” என்றும் கூறுகிறார். இந்த அசாதாரண சூழ்நிலையே மருத்துவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் முனைப்புடன் செயல்பட வைத்துக் கொண்டுள்ளது .
அனைவரும் எதிர்பார்ப்பது போனறதொரு, விரைவான சிகிச்சையை கண்டறிவது அவ்வளவு எளிதானது அல்ல” என்றும் ஹார்பி கூறினார். மேலும், “இந்த மருந்துகளைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பை நாம் கண்டிப்பாக குறைக்க வேண்டும். ஏனெனில், இந்த மருந்துகள் அனைவருக்கும் பொதுவான குனமளிக்காமல் போகலாம் அல்லது ஒரு சுமாரான பலனையே அளிக்கலாம். எனவே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார். இப்போது நாம் அனைவரும் கூட்டு மருந்தியலை நம்புகிறோம். இதன்படி, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி தடுப்பு மருந்துகளை இணைத்து சிகிச்சைக்கு பயன்படுத்தும்போது அவை பெரிய அளவிலான நிவாரணத்தை அளிக்கலாம் என்று நம்புகிறோம். மேலும், எபோலா வைரஸ் எதிர்ப்பு புரதங்களான மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளும் வேலை செய்யும் என்று நம்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். “இது கடுமையான, தீவிரமான வைரஸ் தொற்று என்று நீங்கள் நம்பினால் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகலாம். ஆனால், எபோலா ஒரு மோசமான உதாரணமாக இருக்கும் அளவிற்கு கொடுமையானது. இருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்தன. அதேப் போன்றதொரு நன்நம்பிக்கைக்கு காத்திருப்போம்” என்று கூறி நிறைவு செய்தார்.
தமிழில்: லயா