ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த அரசு பழங்குடிகளின் நிலத்தை பாதுகாக்கும் சோட்டாநாக்பூர் டெனன்சி சட்டம் 1908 மற்றும் சந்தால் பரகனா டெனன்சி சட்டம் 1949 ஆகியவற்றை திருத்தம் செய்து இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தது.
இந்த புதிய மசோதாக்கள் பழங்குடி மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அம்மாநில சட்டமன்றத்தில் மிகுந்த அமளிக்கும், பலத்த கைகலப்புக்கும் இடையே அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கைகலப்பில் ஒருவரையொருவர் நோக்கி செருப்புகள் வீசப்பட்டது.
மசோதா நிறைவேறிய விபரம் தெரிந்ததும் பயங்கர கலவரம் வெடித்தது. பல வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டும் போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் கூட தெருவில் இறங்கி வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் எதிர்கட்சிகள் புதன்கிழமை பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. பழங்குடியினர் டிசம்பர் 2-ஆம் தேதி பந்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
எதிர்கட்சி தலைவர்கள் ஹேமந்த் சோரன் மற்றும் பாபுல் மராண்டி உள்ளிட்ட 9000 பேரை இதுவரை போலீஸ் கைது செய்துள்ளது. முக்கிய தலைவர்களை பின்னர் விடுதலை செய்தது. நிலமை இப்பொழுது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.