திருச்சி: விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்கப்படும் என  திருச்சி உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், உங்களுக்குள்ளே உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் எதிர்காலத்திலும் தொடரனும்,   உங்க காலேஜ் சீனியர்ஸ் எங்க கேபினட் மினிஸ்டர்ஸ்”  என்று கூறியவர்,  மாணவர்களிடையே, நீங்கள் கோட்சே  கூட்டத்தில்  போயிடாதீங்க என்றும்  கூறியதுடன், தமிழ்நாட்டின் நலனை காக்க மாணவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும் எ. ணியில் தமிழ்நாடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் தெரிவித்தார்.

திருவாரூரில் கள ஆய்வுக்காக இரண்டு பயணமாக இன்று சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காலை திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி பவள விழாவில் பங்கேற்றார். திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூருக்கு சன்று, அங்கு , ரோடு ஷோ,  திமுக நிர்வாகிகள் சந்திப்பு, கருணாநிதி சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும்,  புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த ஆய்வின் போது, அவர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்களையும், மக்களின் குறைகளையும் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில்,   இனறு காலை திருச்சியில் உள்ளள ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன். *2011, 16-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது. மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.

நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.  நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. * சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.

கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். *இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி தருகிறேன் என்றும் விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.