கோபி:
தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என கூறியுள்ள அமைச்சர், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறினார்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது… அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றவர், மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளனர் என்றார்.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத் தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தவர், கல்வித்துறைக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக கூறினார்.
பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. (பட்டய பயிற்சி)க்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். இவர்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று கூறியவர், வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் லேப்-டாப் (மடிகணினி) வழங்கப்படும். இதே போல் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.