டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமைக்கான யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். தற்போது கேரளாவில் அவரது நடைபயணம் சென்றுகொண்டிருக்கிறது.
இதற்கிடையில், இன்று (செப்டம்பர் 14ந்தேதி) இந்தி திவாஸ் கொண்டாடப்படுவதைதையொட்டி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய் மொழியாக உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தி, இது தேவானகிரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தி ஒரு மொழி மட்டுமல்ல, அதிகமான இந்தியர்களால் பேசப்பட்டு வரும் மொழியாகும். ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் மொழிகளுக்குப் பிறகு உலகில் நான்காவது இடத்தில் ஹிந்தி மொழி உள்ளது.
இந்தி திவாஸ்க்கு இந்தியில் டிவிட் பதிவிட்டு வாழ்த்து தெரிவிட்டுள்ள ராகுல்காந்தி, உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை, ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.